- Back to Home »
- ஈழம் »
- ஈழத்தில் தமிழருடைய வரலாறு !!
Posted by : தமிழ் வேங்கை
தமிழர்களுக்கென்று ஒரு
வரலாறு உண்டு. தமிழர்களின் வரலாறு என்று பதிவு செய்யப்பட்டது. கடந்த காலங்களில்
ஏற்பட்ட கடல்கோள்களால் அழிக்கப்பட்டது. ஆனால், தமிழர்களின் வரலாறு பகுதிகளை எஞ்சிய சில
இடங்களில் ஒரு சில தனிநபர்கள்தான் வைத்திருந்தார்கள். அவர்களுடைய வரலாற்றுக்
குறிப்புகள் மூலமாக, தமிழர்கள் ஈழத்தினுடைய பூர்விகக்
குடிகள் என்று கண்டுகொண்டோம்.
ஈழம் என்ற சொல்லுக்கு சரியான விளக்கம் இன்னும் யாரும் சொல்லவில்லை. ஆனால், 2000 ஆண்டுகளுக்கு
முன்னால் உள்ள வரலாற்றுக் குறிப்புகள் ஈழத்துக்கு என்ன பொருள் என்று
குறிப்பிடுகிறது. அது என்ன என்று சொன்னால், திராவிடர்
வாழ்ந்த நிலப்பரப்பு கன்னியாகுமரியிலிருந்து ஏறக்குறைய 7000 மைல்களுக்கு
அப்பால் நீண்டிருந்தது என்று வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது. இது கடல்கோளால்
அழிக்கப்பட்டது. தமிழ்ச்சங்கம் என்று முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ச்சங்கம்
அந்த அழிந்து போன மலைபிரதேசங்ளில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்று வரலாற்றுக்
குறிப்பு சொல்கிறது.
இந்த ஈழம் என்ற சொல் புறநானூற்றிலும் இதிகாசங்ளிலும்
சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு சரியான விளக்கம் சொல்லப்படவில்லை. அதற்கு
விளக்கத்தை விளக்க முயற்சித்தவர்களுடைய விளக்கத்திலிருந்து நான் ஒரு விளக்கத்தை
சொல்கிறேன். “ஈழம்” என்ற சொல் ஏழ்
கடலில் இருந்து பிறந்தது என்றுதான் வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது. “ஏழ் கடல்” நாடு என்று ஒரு நாடு இருந்தது, அது குமரி கண்டத்தின் கீழ் இருந்தது. அது இலங்கையுடன் தொடர்புடையதாக
இருந்ததாக வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது. இந்த “ஏழ் கடல்”
நாடினுடைய சுருக்கம்தான் ‘ஈழம்”. இதற்கு அப்பாற்பட்டு சிலர் விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த
விளக்கங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
திராவிட மொழிகளில் தமிழ் மூத்த மொழி, அதிலிருந்து பிரிந்து சென்றதுதான் ஏனைய மொழிகள். அப்படி
ஒரு மொழிதான் ஈழத்தில் இருந்தது என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு ஆதாரக்
குறிப்புகள் எதுவும் இல்லை. இலங்கையில் இருந்தது “எழு”
மொழி என்று சொல்லப்படுகிறது. “துளு” மொழி என்று ஒரு மொழி இருக்கிறது. அந்த மொழி கர்நாடக மாநிலத்தினுடைய
மேற்குப் பகுதிகளில் பேசப்படுகிறது. இது திராவிட மொழி. கன்னடமும் திராவிட மொழிதான்,
தெலுங்கும் திராவிட மொழிதான், மலையாளமும்
திராவிட மொழிதான், இப்படி தமிழிலிருந்து பிரிந்து சென்ற
மொழிகளில் இருக்கிற சமஸ்கிருத சொற்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் மிஞ்சுகிறது
தமிழ் மட்டுமே. தெலுங்கை எடுத்துக்கொண்டால் அதிலிருக்கிற வடமொழி, சமஸ்கிருத சொற்களை நீக்கினால் மிஞ்சுகிறது தமிழ்தான். கன்னடத்திலிருக்கிற
வடமொழி சொற்கள் சமஸ்கிருத சொற்களை நீக்கினால் மிஞ்சுகிறது தமிழ். மலையாளத்திலும்
இதுதான்! அடுத்தது துளு! ஈழத்திலே “எழு” மொழி இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு ஆதாரப்பூர்வமான சான்றுகள்
எதுவும் இல்லை. ஆகவே ஏற்றுக்கொள்ளக்கூடியதற்கான ஆதாரப்பூர்வமான சொல் ஈழம்
என்பதற்கான வழியமைப்பு ‘ஏழ்கடல் நாடு” என்பது,
ஏழ் கடல் நாடு ஒரு கட்டத்தில் கடலில் மூழ்கியது. அப்படி கடலில்
மூழ்கியிருந்தால் அது எப்பொழுது? அது எப்படி என்று ஒரு
வரலாற்றுக் குறிப்புச் சொல்லப்படுகிறது. கிறிஸ்துவுக்கு முன் 2378ஆம் ஆண்டுகளுக்கு முன் கடல்கோள் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அந்தக் கடல்கோளில்தான் முழு பகுதியும் அழிந்து இலங்கை நாடு தீவானது என்று
சொல்லப்படுகிறது. பூம்புகாருக்கு மேல்பகுதியிலிருந்தும் குமரிக்கு
பின்பகுதிவரைக்கும் எல்லாம் கடலில் மூழ்கியது என்று சொல்லப்படுகிற வரலாற்றுக்
குறிப்புகள் இருக்கிறது. ஆனால், இது ஆதாரப்பூர்வமாக
எழுதப்படவில்லை. ஏனென்றால், கிறிஸ்துவுக்கு முன்
கிறிஸ்துவுக்குப் பின் என்று பின்நாள்களில்தான் வந்திருக்கிறது. அதை ஒரு
குறிப்பின்படிதான் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் எப்படியென்றால், கிறிஸ்துவுக்கு முன் 2378 ஆம் ஆண்டு சொல்லப்போனால்
இப்போது 4388 ஆண்டுகளுக்கு முன் என்று எடுத்துக்கொள்ளலாம்.
“ஈழம்”; என்ற சொல் தமிழுக்குச் சொந்தமானதே தவிர வேறு
எந்த மொழிக்கும் சொந்தமானதல்ல. இலங்கையில் இன்று “லங்கா”
என்று சொல்லப்படும் சொல் அது சிங்களத்துக்குச் சொந்தமானதல்ல அது
சமஸ்கிருதத்துக்கும், பாளி மொழிக்கும் சொந்தமானச் சொல்.
ஏனென்றால் சிங்களவர் இலங்கையில் இறங்கும் போது அதற்கு இலங்கை என்ற பெயர் இல்லை.
பிக்குகள் 1800 ஆண்டுகளுக்கு முன்பு மதத்தைப் பரப்ப
வந்திறங்கிய போதுதான் லங்கா என்று பெயர் வைத்தனர். லங்கா என்றால் “தீவு” என்று அர்த்தம். ஆகவே, அவர்கள்
தீவுக்குப் போனார்கள், தீவுக்குப்
போனபடியால் அவர்கள் லங்கா என்று பெயர் வைத்தனர். பின்னால் அவர்கள் “சிறி” யைச் சேர்த்து சிறிலங்கா என்று
மாற்றிவிட்டனர்.
ஆகவே வரலாற்றுக் குறிப்புகளை நாங்கள் எடுத்துக்கொண்டு பார்த்தாலே “ஈழம்”
என்ற சொல்தான் நிரந்தரமான தமிழ்ச் சொல். “லங்கா”
என்ற சொல் சிங்களவருக்கும் சொந்தமில்லை தமிழருக்கும் சொந்தமில்லை.
இப்போது “ஈழம்” என்ற சொல்லைப்
பயன்படுத்தக்கூடாது என்று சொல்லும் அளவுக்கு சிங்களவர்கள் முன்னேறிவிட்டனர்.
தமிழர்களுக்கென்று ஒரு
வரலாறு உண்டு. தமிழர்களின் வரலாறு என்று பதிவு செய்யப்பட்டது. கடந்த காலங்களில்
ஏற்பட்ட கடல்கோள்களால் அழிக்கப்பட்டது. ஆனால், தமிழர்களின் வரலாறு பகுதிகளை எஞ்சிய சில
இடங்களில் ஒரு சில தனிநபர்கள்தான் வைத்திருந்தார்கள். அவர்களுடைய வரலாற்றுக்
குறிப்புகள் மூலமாக, தமிழர்கள் ஈழத்தினுடைய பூர்விகக்
குடிகள் என்று கண்டுகொண்டோம்.
ஈழம் என்ற சொல்லுக்கு சரியான விளக்கம் இன்னும் யாரும் சொல்லவில்லை. ஆனால், 2000 ஆண்டுகளுக்கு
முன்னால் உள்ள வரலாற்றுக் குறிப்புகள் ஈழத்துக்கு என்ன பொருள் என்று
குறிப்பிடுகிறது. அது என்ன என்று சொன்னால், திராவிடர்
வாழ்ந்த நிலப்பரப்பு கன்னியாகுமரியிலிருந்து ஏறக்குறைய 7000 மைல்களுக்கு
அப்பால் நீண்டிருந்தது என்று வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது. இது கடல்கோளால்
அழிக்கப்பட்டது. தமிழ்ச்சங்கம் என்று முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ச்சங்கம்
அந்த அழிந்து போன மலைபிரதேசங்ளில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்று வரலாற்றுக்
குறிப்பு சொல்கிறது.
இந்த ஈழம் என்ற சொல் புறநானூற்றிலும் இதிகாசங்ளிலும்
சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு சரியான விளக்கம் சொல்லப்படவில்லை. அதற்கு
விளக்கத்தை விளக்க முயற்சித்தவர்களுடைய விளக்கத்திலிருந்து நான் ஒரு விளக்கத்தை
சொல்கிறேன். “ஈழம்” என்ற சொல் ஏழ்
கடலில் இருந்து பிறந்தது என்றுதான் வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது. “ஏழ் கடல்” நாடு என்று ஒரு நாடு இருந்தது, அது குமரி கண்டத்தின் கீழ் இருந்தது. அது இலங்கையுடன் தொடர்புடையதாக
இருந்ததாக வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது. இந்த “ஏழ் கடல்”
நாடினுடைய சுருக்கம்தான் ‘ஈழம்”. இதற்கு அப்பாற்பட்டு சிலர் விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த
விளக்கங்கள் எவையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
திராவிட மொழிகளில் தமிழ் மூத்த மொழி, அதிலிருந்து பிரிந்து சென்றதுதான் ஏனைய மொழிகள். அப்படி
ஒரு மொழிதான் ஈழத்தில் இருந்தது என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு ஆதாரக்
குறிப்புகள் எதுவும் இல்லை. இலங்கையில் இருந்தது “எழு”
மொழி என்று சொல்லப்படுகிறது. “துளு” மொழி என்று ஒரு மொழி இருக்கிறது. அந்த மொழி கர்நாடக மாநிலத்தினுடைய
மேற்குப் பகுதிகளில் பேசப்படுகிறது. இது திராவிட மொழி. கன்னடமும் திராவிட மொழிதான்,
தெலுங்கும் திராவிட மொழிதான், மலையாளமும்
திராவிட மொழிதான், இப்படி தமிழிலிருந்து பிரிந்து சென்ற
மொழிகளில் இருக்கிற சமஸ்கிருத சொற்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் மிஞ்சுகிறது
தமிழ் மட்டுமே. தெலுங்கை எடுத்துக்கொண்டால் அதிலிருக்கிற வடமொழி, சமஸ்கிருத சொற்களை நீக்கினால் மிஞ்சுகிறது தமிழ்தான். கன்னடத்திலிருக்கிற
வடமொழி சொற்கள் சமஸ்கிருத சொற்களை நீக்கினால் மிஞ்சுகிறது தமிழ். மலையாளத்திலும்
இதுதான்! அடுத்தது துளு! ஈழத்திலே “எழு” மொழி இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு ஆதாரப்பூர்வமான சான்றுகள்
எதுவும் இல்லை. ஆகவே ஏற்றுக்கொள்ளக்கூடியதற்கான ஆதாரப்பூர்வமான சொல் ஈழம்
என்பதற்கான வழியமைப்பு ‘ஏழ்கடல் நாடு” என்பது,
ஏழ் கடல் நாடு ஒரு கட்டத்தில் கடலில் மூழ்கியது. அப்படி கடலில்
மூழ்கியிருந்தால் அது எப்பொழுது? அது எப்படி என்று ஒரு வரலாற்றுக்
குறிப்புச் சொல்லப்படுகிறது. கிறிஸ்துவுக்கு முன் 2378ஆம்
ஆண்டுகளுக்கு முன் கடல்கோள் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தக்
கடல்கோளில்தான் முழு பகுதியும் அழிந்து இலங்கை நாடு தீவானது என்று
சொல்லப்படுகிறது. பூம்புகாருக்கு மேல்பகுதியிலிருந்தும் குமரிக்கு
பின்பகுதிவரைக்கும் எல்லாம் கடலில் மூழ்கியது என்று சொல்லப்படுகிற வரலாற்றுக்
குறிப்புகள் இருக்கிறது. ஆனால், இது ஆதாரப்பூர்வமாக
எழுதப்படவில்லை. ஏனென்றால், கிறிஸ்துவுக்கு முன்
கிறிஸ்துவுக்குப் பின் என்று பின்நாள்களில்தான் வந்திருக்கிறது. அதை ஒரு குறிப்பின்படிதான்
அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் எப்படியென்றால், கிறிஸ்துவுக்கு
முன் 2378 ஆம் ஆண்டு சொல்லப்போனால் இப்போது 4388 ஆண்டுகளுக்கு முன் என்று எடுத்துக்கொள்ளலாம்.
“ஈழம்”; என்ற சொல் தமிழுக்குச் சொந்தமானதே தவிர வேறு
எந்த மொழிக்கும் சொந்தமானதல்ல. இலங்கையில் இன்று “லங்கா”
என்று சொல்லப்படும் சொல் அது சிங்களத்துக்குச் சொந்தமானதல்ல அது
சமஸ்கிருதத்துக்கும், பாளி மொழிக்கும் சொந்தமானச் சொல்.
ஏனென்றால் சிங்களவர் இலங்கையில் இறங்கும் போது அதற்கு இலங்கை என்ற பெயர் இல்லை.
பிக்குகள் 1800 ஆண்டுகளுக்கு முன்பு மதத்தைப் பரப்ப
வந்திறங்கிய போதுதான் லங்கா என்று பெயர் வைத்தனர். லங்கா என்றால் “தீவு” என்று அர்த்தம். ஆகவே, அவர்கள்
தீவுக்குப் போனாhகள், தீவுக்குப்