தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

நான் இறந்தால் என் உடலை புலி கொடி போர்த்தி எடுத்து செல்லுங்கள் என்று தன் ஈழ தமிழ் ஆதரவை எங்குமே முழங்கி வந்த திரைப்பட இயக்குனரும் நடிகருமான திரு. மணிவண்ணன் அவர்கள் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார் அன்னாருக்கு ஆழ்ந்த‌ இரங்கல்களை தெரிவித்து கொள்கின்றோம்.


இனமான இயக்குனர் திரு மணிவண்ணன் காலமானார்...
**********************************************************

இயக்குநர் - நடிகர் - எழுத்தாளர் - தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58. 

கல்லுக்குள் ஈரம் படத்திலிருந்து பாரதிராஜாவின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மணிவண்ணன், பின்னர் அவரது படங்களின் பிரதான எழுத்தாளராகப் பணியாற்றினார். அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் என பல படங்களில் அவர்தான் வசனகர்த்தா. பின்னர் கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெள்ளி விழாப் படங்களைத் தந்த மணிவண்ணன், கடைசியாக இந்த ஆண்டு அமைதிப்படை 2 என்னும் படத்தை இயக்கினார். இது அவருக்கு 50வது படம். 

ரஜினி நடித்த கொடிபறக்குது படத்தில்தான் அவர் நடிகராக அறிமுகமானார். கிட்டத்தட்ட 600 படங்கள் வரை அவர் நடித்துள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு 3 புதிய படங்களை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் இன்று அகாலமாக மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

மணிவண்ணன் ஏற்கெனவே இருதய அறுகைச் சிகிச்சையும், முதுகில் தண்டுவட அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டிருந்தார். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்தார். மணிவண்ணனுக்கு மனைவியும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர்.





ஈழத்தமிழனின் இதயங்களின் 
நிறைந்த மனிதம் அங்கே ! 
தன் மூச்சை நிறுத்தி காற்றாகி ...!
தமிழ் உறவுகள் வாழும் 
தேசம் எங்கும் சென்று 
நெஞ்சில் ஆறாத் துயர் விதைகிறாய்.
பல முறை எம் தேதத்திற்க்காக
ஓங்கி ஒலித்த குரலவனே....
போனாயோ எட்டாத தொலைவிற்கு....?
ஈழதேசம் உனக்காகவும் ஏங்குகிறது
அம்மண்ணில் பிறக்காவிடினும்
தமிழீழ மண்ணின் பெருமை
தேசியத்தலைமகன் வீரம் உரைத்தவனே
நீயும் ஓர் கனவு கண்டிருப்பாய்
அதை யாவரும் அறிவார்
அது ஓர் நாள் நனவாகும்...
கண்களில் ஓரம் மணி... மணியாக
கண்ணீர்த்துளிகள் துளிர்க்கின்றன
நின்மதியாய் உறங்குவாய் மணிவண்ணனே !


Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -