- Back to Home »
- ஈழம் »
- விடுதலைபுலிகளின் உளவுத்துறை.
Posted by : தமிழ் வேங்கை
விடுதலைபுலிகளின்
உளவுத்துறையின் கட்டமைப்பானது வல்லரசு நாடுகளின் உளவுத்துறைக்கு நிகாரானதாக அமைந்த
ஒன்றாகும். பல நாட்டு இராணுவத்துக்கு வயிற்றில் புலியை கரைத்த
விடயங்களில் ஒன்று புலிகளின் விமானங்கள் மற்றது புலிகளின் மிக பலமான உளவு
அமைப்பாகும்.
விடுதலைபுலிகளின்
பல வெற்றி தாக்குதல்களுக்கு முதுகெலும்பாக செயற்பட்டது தமிழீழ விடுதலைபுலிகளின்
உளவு அமைப்பாகும். விடுதலை புலிகளை அழித்து விடுவோம் என்று கிளம்பிய எத்தனையோ
நாடுகள் போட்ட சதிவலை திட்டங்கள் அனைத்தையும் மிக திறமையாக எதிர்கொண்டு விடுதலை
போராடத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு பக்க பலமாக இருந்து இந்த
உளவுத்துறையாகும்.
தமிழீழ
விடுதலைப் புலிகள் அமைப்பில் எதிரிகளாகக் கருதப்படுபவர்களின் மீது தாக்குதல்
நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம், படைக் கட்டமைப்புக்கள்
போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும், மேலும் ஒரு பெரிய தாக்குதல்
நடவடிக்கையை நடத்துவதற்கு முன்னர் எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும்
கண்காணித்துப் பின் விடுதலைப் புலிகளின் போராளிகள் நடத்தவல்ல சமர்களுக்கான
தகவல்களை வழங்குவது என்று இந்த உளவுத்துறையின் பணி மிக நீண்ட ஒன்றாகும்.
ஆரம்ப காலத்தில் இருந்து இறுதிவரை உளவுத்துறையின் தலைவராக இருந்தவர் போட்டு அம்மான் ஆகும். இவர் புலிகள் அமைப்பில் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தவிர கேர்னல் சார்ல்ஸ் மற்றும் ரத்ன மாஸ்டர் ஆகியோர் உளவுத்துறையில் குறிபிடத்தக்க தலைவர்களாகும்.
ஆரம்ப கால கட்டங்களில் கெரில்லா மையமாக இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பு பின்னர் படிப்படியாக பெரிய தாக்குதல்களை நடத்தி, கெரில்லா அமைப்பு என்ற நிலையில் இருந்து மரபு ரீதியான இராணுவ அமைப்பாக வளர்ச்சி அடைந்தது. இந்த வளர்ச்சிக்கும் புலிகளின் தாக்குதல்கள் பெரும்பாலானவை வெற்றி தாக்குதல்களாக இருந்தமைக்கும் பிரதானமான காரணமாக கூற படுவது அவர்களின் உளவு அமைப்பு மிக பலம் வாய்ந்த ஒன்றாக இருந்தமையே ஆகும்.
புலிகளின் உளவுத்துறையின் திறமைக்கு மிக சிறந்த சான்றாக இருப்பது கட்டுநாயக்க விமான படை தல தாக்குதல்லாகும். உயர் பாதுகாப்பு வலயத்தில் இலங்கையின் தலைநகரில் இருந்த கட்டுநாயக்கா விமான படை தளத்தில் தாக்குதல் நடத்துவது அதுவும் அந்த தாக்குதலை வெற்றி தாக்குதலாக மாற்றுவது என்பது அப்போதைய கால கட்டத்தில் வெறும் கனவாகவே இருந்தது.
ஆனால், அந்த கனவை நனவாக்கி தேசிய தலைவரின் எண்ணத்தில் உதித்த தாக்குதல் திடத்துக்கு செயல் வடிவம் கொடுத்த பெருமை உளவுத்துறையே சாரும். பெரும் வெற்றி தாக்குதலாக அமைந்த அந்த தாக்குதல் தான் பின்னாளில் சிறிலங்கா அரசு சாமதானம் சமாதானம் என்று புலிகளின் காலில் விழுந்து கேஞ்சுவதட்கும் காரணமாக அமைந்தது.
அதன் பிறகு அனுராதபுர விமானபடை தளம் மீதான கரும்புலிகளின் அதிரடி தாக்குதலுக்கும் மூல காரணமாக அமைந்தது உளவுத்துறையின் மிக நேர்த்தியான மிக துல்லியமான உளவுத்தகவல்களே ஆகும்.
மேலும் ஆரம்ப கால கட்டத்தில் புலிகள் அமைப்பில் மிக முக்கிய தலைவராக இருந்து பின்னாளில் துரோகியாக மாறிய மாத்தையா என்பவரை சரியான நேரத்தில் இனம் கண்டு அவரின் கதையை முடித்த பெருமையும் உளவுத்துறையே சாரும். இந்த மாத்தையா என்பவர் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து தலைவர் அவர்களை போட்டு தள்ள திட்டம் திட்டி இருந்தனர், இதனை முன்கூட்டியே அறிந்து மாத்தையாவின் கதையை முடித்து தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்தனர் உளவுத்துறையினர்.
மேலும் தென் இலங்கையில் நடத்தபட்ட பல வெற்றி தாக்குதல்களுக்கு காரணமாக இருந்தது உளவுத்துறையின் மிக துல்லியமான உளவு தகவல்களே ஆகும். இலங்கை ஜானதிபதி ஒருவர் மீது நடத்தபட்ட தாக்குதல் இலங்கைக்கு வெளியில் நடத்தபட்ட ஒரே ஒரு தாக்குதல் என்று உளவுத்துறையின் வீச்சானது மிக நீண்ட ஒன்றாகும்.
இதைபோல் புலிகளின் உளவுத்துறையினரும் சில இடங்களில் சறுக்கி இருந்தனர். இதில் மிக முக்கியமாக உளவுத்துறையினர் சறுக்கிய இடமாக கூறபடுவது கருணாவின் துரோகமாகும். மாத்தையாவின் துரோகத்தை சரியான நேரத்தில் இனம் கண்ட உளவுத்துறையினர் கருணா அம்மான் விடயத்தில் சறுக்கி விட்டனர். கருணா அம்மான் இயக்கத்தில் விட்டு விலகி துரோகியாகி இராணுவத்துடன் சேர்ந்த பின்னர் கருணாவை போட்டு தள்ள போட்ட திடங்களும் வெற்றியாக மாறவில்லை.
இதனை விட இலங்கை இராணுவத்தளபதி சரத் பொன்சேகா மீது மேட்கொள்ளபட்ட தற்கொலை தாக்குதலில் பொன்சேகா படுகாயமடைந்து கோமா வரை சென்று இறுதியில் உயிர் பிழைத்து கொண்டார். இதுவும் ஒருவகையில் தோல்வியாகவே முடிந்தது. அடுத்து கோத்தபாய ராஜபக்சே மீது மேற்கொள்ளபட்ட தாக்குதலும் தோல்வியிலே முடிந்தது.
எது எப்படியோ ஈழ போர் வரலாற்றில் உளவுத்துறையின் பங்கு என்பது மிக முக்கியமா ஒன்றாகும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.பல சோதனையான கால கடத்தில் எமது விடுதலை போராடத்துக்கு வந்த தடைகளை எல்லாம் அகற்றி விடுதலை பயணத்தை வீச்சோடு முன்னெடுத்தே செல்ல உதவிய உளவுத்துறையானது இன்று எமக்கு ஏற்பட்டு இருக்கும் இததைகய கடினாமா சூழ்நிலையில் இருந்து மீண்டும் எமது விடுதலை போரை இழுத்து செல்ல கண்டிப்பாக உரிய தருணத்தில் கண்டிப்பாக வருவார்கள் என்று நம்புவோம்.