தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை,(1899 - 19 - 12 - 1994) பரவலாகமுத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச்சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அஃது தமிழரின்
தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும் தமிழ்வளர்ச்சித்துறையால்
2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. [1] [2]
பிறப்பும் இளமைக்காலமும்
1893-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி பெரியண்ண பிள்ளை - சுப்புலட்சுமி அம்மையார் அவர்களுக்கு புதல்வனாய் பிறந்தார். தமிழ் இலக்கண கடலான இவர் பள்ளிக்கு சென்றதில்லை. ஐந்தாவது வயதில் முத்துச்சாமிக் கோனாரிடம் மணலில் தமிழ் எழுத்துகளை எழுதிப் பயிற்சி பெற்றார். நாவலர் வேங்கடசாமி நாட்டார், மறைமலையடிகள், திரு. வி. க, நாவலர் சோமசுந்தர பாரதியார் முதலிய தமிழறிஞர்கள் தொடர்பால் தாமாக முயன்று தமிழ் இலக்கண-இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றார். [3]
முக்கிய நிகழ்வுகள்


*.முதல் இந்தி எதிர்ப்புப்போரில் (1938) தந்தை பெரியாரோடும், தமிழறிஞர்களோடும் கைகோத்துப் போராடிய முதன்மைப் போராளியே கி. ஆ. பெ. விசுவநாதம்.
*.1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் மக்களை தூண்டியதாகக் கூறி இரண்டு மாதம் சிறையிலடைக்கப்பட்டார். அதன் காரணமாக கி. ஆ. பெ. விசுவநாதம் தனது மகள் மணிமேகலை திருமண உறுதியேற்பாடு நிகழ்வுக்கு செல்ல முடியவில்லை. தன் வாழ்நாளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் போருக்கு துணை நின்றார். [4]
விருதுகள்
*.1956ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கம்"முத்தமிழ் காவலர்" விருது வழங்கியது
*.1965ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற சித்த மருத்துவ மாநாட்டில் "சித்த மருத்துவ சிகாமணி" விருது வழங்கப்பட்டது
*.1975ஆம் ஆண்டு தமிழ்நாட்டு நல்வழி நிலையம் "வள்ளுவ வேல்" என்னும் விருது வழங்கியது
பெருமைக்குரிய செய்திகள்
1.2000ஆம் ஆண்டிலிருந்து கி. ஆ. பெ. விசுவநாதம் விருதுஅவர்களின் பெயரில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் தமிழ்நெறியில் தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
2.இவரது நினைவில் ஐந்து ரூபாய் தபால் தலை இந்திய தபால் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. [5]
3.1997ல் முதல்வர் கருணாநிதி திருச்சியில் துவக்கிய மருத்துவ கல்லூரிக்கு 

கி. ஆ. பெ.யின் பெயர் சூட்டப்பட்டது

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -